காதலிக்காக முதல் திருமணத்தை விவாகரத்து செய்த நடிகர்? விரைவில் இவருடன் 2ஆம் திருமணமாம்!

actor movie vishal vishnu
By Jon Mar 23, 2021 02:47 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் இடத்தினை பெற பல நடிகர்கள் போராடி வருகிறார்கள். அந்த வரிசையில் இருப்பவர் தான் நடிகர் விஷ்ணு. ஆரம்பகாலத்தில் ஓரளவு வெற்றியை கொடுத்து படுதோல்வியை கொடுத்து வந்தார். சமீபத்தில் விஷ்ணுவும் அமலாபாலும் இணைந்து நடித்த ராட்சசன் படம் நல்ல விமர்சனத்தை பெற்றது.

2010ல் ரஜினி நட்ராஜ என்பரை திருமணம் செய்த விஷ்ணு, 8 வருடங்களுக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். திருமணமாகி 7 வருடம் கழித்து பிறந்த ஆர்யன் என்ற மகன் இருக்கும் நிலையில் விவாரத்து பெற்றது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் நடிகை அமலாபாலும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது. இதை மறுத்து விஷ்ணு கூறியிருந்தார். இந்நிலையில், விவாரத்துக்கு பிறகு பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டாவை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் இணையத்தில் வெளியிட்டு வந்தனர்.

தற்போது காடன் படத்தின் பிரீ லிஸ்சில் பங்கு பெற்று பேசினார். அப்போது நாங்கள் இருவரும் விரைவில் இணையவுள்ளோம் என்றும் விரைவில் தெலுங்கு தேசத்தின் அல்லுடுவாகப்போகிறேன் என்று கூறினார். அல்லுடு என்றால் மருமகன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் கூடிய சீக்கிரமே ஜுவாலா குட்டாவை இரண்டாம் திருமணம் செய்யப்போகிறேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் விஷ்ணு.