மாதம்பட்டி ரங்கராஜ் குடும்பத்துக்கு வாழ்வளித்த ஜமீன் நடிகரின் குடும்பம்!! வெளியான புது தகவல்..
மாதம்பட்டி ரங்கராஜ்
அறுசுவை வகைவகையான பிரமிக்க வைக்கும் உணவு வகைகளின் ஸ்பெஷலிஸ்டாக திகழ்ந்து வரும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி தான் சமீபகாலமாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தன்னுடைய ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார் ரங்கராஜ். அதன்பின் 5 மாதம் கர்ப்பமாக இருக்கும் போது தன்னை ஏமாற்றிவிட்டதாக ரங்கராஜ் மீது ஜாய், புகாரளித்து அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவையும் இணையத்தில் பகிர்ந்து பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் தந்தை மற்றும் அவரின் குடும்ப பேக்ரவுண்ட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ரங்கராஜின் தந்தை தான் மாதம்பட்டி தங்கவேலு. அவரும் சிறந்த சமையல் கலைஞராக இருந்து, நடிகர் திலகம் சுவைத்து பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. ரூ. 60 சம்பளத்துகு தொடங்கி இப்போது இந்தியாவிலேயே டாப் முக்கிய சமையல்காரராக மாறியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் முக்கிய புள்ளியாக மாறியிருக்கும் ரங்கராஜ் குடும்பத்துக்கு பூர்வீகம் மாதம்பட்டி கிடையாதாம். அவரின் குடும்பம் கர்நாடக மாநிலம் மைசூரு தான் பூர்வீகம். பிழைப்பு தேடி வந்த இடம் தான் தமிழ்நாடு. அப்படியிருக்கையில் இந்த புகழை அடையவும், அவர்களின் குடும்பத்துக்கு மாதம்பட்டி என்ற அடையாளம் வர காரணமாக இருந்தது ஒரு தமிழ் நடிகரின் குடும்பம் தான் காரணமாம்.
ஜமீன் நடிகரின் குடும்பம்
அவர் வேறுயாருமில்லை, நடிகர் விஜய்யின் நண்பன் படத்தில் சைலன்சர் ரோலில் நடித்த நடிகர் சத்யன் தானாம். பல படங்களில் விஜய்யுடன் நடித்த சத்யனின் தந்தை தான் சிவக்குமார். கோயம்புத்தூர் வட்டத்தில் பிரபலமான ஊர் தான் மாதம்பட்டி. இந்த மாதம்பட்டியின் ஜமீன் தான் மாதம்பட்டி சிவக்குமார். பல கோடி சொத்துக்களுக்கு அதிபதியான இவர், அக்காலத்தில் இவர்களின் பரம்பரை குறுநில அரசர்களாக இருந்ததாகவும் சிவக்குமார் சினிமா தயாரிப்பாளராக்வும் இருந்தவராம்.
இதே மாதம்பட்டி தான் ரங்கராஜின் தாய்க்கும் சொந்த ஊர். அவரின் தந்தை தங்கவேலு 1971ல் ஒரு குடும்பத்தில் சமையல்காரராக மாதம் ரூ. 60 சம்பளத்துக்கு முதலில் வேலை பார்த்திருக்கிறார். இதன்பின் பெங்களூருவில் ஒரு ரெஸ்டாரெண்ட்டில் பணிபுரிந்து, பின்னாளில் அதே ரெஸ்டாரெண்ட்டை நடத்தும் அளவிற்கு திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் அந்த ரெஸ்ட்டாரெண்ட் இரண்டு வருடத்தில் நஷ்டமாக மனைவியின் சொந்த ஊரான மாதம்பட்டிக்கே திரும்பி அங்கேயே கிடைக்கும் வேலையை செய்து வந்தார் தங்கவேலு. அங்கிருக்கும் ஒருவருடன் சேர்ந்து சமையல் தொழில் செய்து வந்த சமயத்தில் தான், மாதம்பட்டி சிவக்குமார் தயாரித்த சின்னத்தம்பி பெரியதம்பி, பூவும் புயலும் ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் சமையல் செய்யும் வாய்ப்பை தங்கவேலுக்கு வழங்கி இருக்கிறார்.
வாய்ப்பு
கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய தங்கவேலு, தன்னுடைய சமையலால் சினிமா நட்சத்திரங்களை அசத்தி, வெற்றி வாய்மொழியாக ஊர் மக்களிடம் சென்றது. அந்த வகையில் மகன் ரங்கராஜுக்கும் முன்பே சினிமா மூலம் பிரபலமாகியிருக்கிறார் தங்கவேலு.
அதன்பின் தான் சினிமா பிரபலங்களுக்கே சமைத்தவர் என்ற அடையாளம் மாதம்பட்டி தங்கவேலுக்கு கிடைத்து மாதம்பட்டி என்கிற அடையாளத்துடன் கேட்டரிங் தொழிலை சிறப்பாக தொடங்கி பிரபலமானார்கள். தற்போது மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிடாலிட்டி பிரைவேட் லிமிடேன் என்ற நிறுவனத்தை மாதம்பட்டி ரங்கராஜ் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.