மும்தாஜுக்கும் அந்த நிலைமை தான்!! வடிவேலு என்ன பாடுபடுத்தினார் தெரியுமா? பிரபலம் ஓபன் டாக்..
வடிவேலு
காமெடி நடிகர் வடிவேலு, கடந்த 2011ல் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணிக்கு ஆதரவாக பேசி, விஜயகாந்தை சரமாரியாக விமர்சித்தார். இதன்காரணமாக அவர்கள் இருவருக்கும் இடையே மிதல் ஏற்பட்டு பல சம்பவங்கள் நடந்ததாக கூறப்பட்டது. இதன்பின் சில காரணங்களால் ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகினார் வடிவேலு. அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்த வடிவேலு, மாமன்னன், மாரிசன், கேங்கர்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். வடிவேலு பற்றி அவருடன் நடித்த பலரும் மோசமான மனிதர் என்று விமர்சித்து பேசியிருக்கிறார்கள்.
செய்யாறு பாலு
சமீபத்தில் 10 யூடியூபர்கள் சேர்ந்து சினிமாவை அழித்துவருகிறார்கள் என்றும் அவர்களை போர்கால அடிப்படையில் உண்டு இல்லை என்று செய்யவேண்டும், அவர்களுக்கு நடிகர் சங்கம் ஆப்பு வைக்க வேண்டும், இல்லையென்றால் அவர்கள் சினிமாவை அழித்துவிடுவார்கள் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்த பேட்டியொன்றில் வடிவேலு பேசியது குறித்து பேசியுள்ளார்.
மும்தாஜுக்கும்
அதில், நடிகர் சங்க பொதுக்குழுவில் வடிவேலு பேசியிருப்பதெல்லாம் தேவையில்லாத ஒன்று. இப்போது கைகளில் மொபைல் வைத்திருக்கும் அத்தனை பேரும் பத்திரிக்கையாளர்கள் தான். அவர் பீக்கில் இருந்தபோது அவரது வீட்டு காம்பவுண்ட்டில் அவரைபற்றி எக்குத்தப்பாக எழுதிவிட்டு செல்வார்கள். அப்போது நான் ஒரு பிரபல புலனாய்வு பத்திரிக்கையில் சினிமா பத்திரிக்கையாளராக இருந்தபோது இந்த விஷயம் பெரிதானதையடுத்து பிஆர்ஓ மூலம் வடிவேலுவிடம் பேசினேன்.
அவரும் நடந்தவற்றை சொன்னார். அவருக்கு மட்டும் அப்படி அப்போது நடக்கவில்லை, நடிகை மும்தாஜுக்கும் மிரட்டல் வந்தது. எனவே இரண்டு பேருக்கும் நடந்ததை சேர்த்து எழுதினேன். பின் தான் நடிகர் சங்கம் அதில் தலையிட்டு பிரச்சனையை முடித்து வைத்தனர். வடிவேலு இப்போது யூடியூபர்களையும், தயாரிப்பாளர்கள் அடுத்த படத்தை பணம் கொடுத்து காலி செய்கிறார்கள் என்று பேசியிருக்கிறார்.
அவர் எத்தனை தயாரிப்பாளர்களை என்ன பாடுப்படுத்தி இருக்கிறார் என்று அவருடன் நடித்த நடிகர்களிடம் கேட்டால் தெரியும். இப்படி பொத்தாம் பொதுவாக வடிவேலு பேசியிருக்க கூடாது. சோசியல் மீடியா வளர்ச்சி என்னவென்றே அவருக்கு தெரியவில்லை என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.