மறைந்த நடிகர் ரோபோ ஷங்கரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Tamil Cinema
Robo Shankar
By Yathrika
ரோபோ ஷங்கர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கள் மூலம் ஏகப்பட்ட கலைஞர்களுக்கு நல்ல வாழ்க்கை கிடைத்துள்ளது.
அப்படி ஒரு கலைஞன் தான் ரோபோ ஷங்கர், விஜய்யில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது என பல நிகழ்ச்சி மேடைகளில் தனது திறமையை காட்டி வெள்ளித்திரையில் கால் பதித்தவர்.
அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து கலக்கி வந்தவர் இப்போது நம்முடன் இல்லை. கடந்த செப்டம்பர் 18ம் தேதி உயிரிழந்தார்.
ஆரம்ப காலத்தில் இருந்து நிறைய கஷ்டப்பட்டு உழைத்தவர் நல்ல சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அவரது சொத்து மதிப்பு ரூ. 5 முதல் 6 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.