தன்னுடைய கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்ட பாலா பட நடிகர்.. ஷாக்கான நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் 1986 ல் வெளியான அறுவடை நாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராகவும் கேப்டன் மகள் என்ற படத்தில் நடிகராகவும் நடிக்க ஆரம்பித்தவர் ஜி எம் குமார்.
கதையாசிரியராகவும் திகழ்ந்து வரும் ஜி எம் குமார் முன்னணி நடிகர்கள்,. இயக்குனர்கள் படங்களில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார்.
வெயில், குருவி, அவன் இவன், தாரைத்தப்பட்டை, கர்ணன், பொம்மை நாயகி, பல்லு படாம பாத்துக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வந்திருக்கிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து கருத்துக்களை கூறும் ஜி எம் குமார் தனக்கு அடிக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்டருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
வரும் 2023 மே 1 ஆம் தேதி காலாமானார் என்று குறிப்பிடப்பட்ட இந்த போஸ்டரை பார்த்து நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.
ஆயிரக்கணக்கான நகைச்சுவை வெளிப்பாடுகள் தான் வாழ்க்கை? pic.twitter.com/w3EFA8JNTV
— G.M. Kumar (@gmkhighness) March 21, 2023