துப்பாக்கி துடைக்கும் போது தன்னை சுட்டுக்கொண்ட பிரபல நடிகர், ரசிகர்கள் ஷாக்

Bollywood
By Tony Oct 01, 2024 08:30 AM GMT
Tony

Tony

Report

கோவிந்தா

பாலிவுட் திரையுலகில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் கோவிந்தா. இவருக்கு என்று அப்போது மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இருந்தது.

அதிலும் குறிப்பாக கோவிந்தாவின் காமெடிக்கு என்று பெரிய ரசிகர்கள் கூட்டம் திரையரங்கிற்கு அவரை காண வரும்.

தன்னை தானே சுட்டுக்கொண்டார்

இந்நிலையில் கோவிந்தா இன்று காலை தன் துப்பாக்கியை சுத்தம் செய்வதற்காக எடுத்துள்ளார். அப்படி எடுக்கையில் தெரியாமல் தன்னை தானே சுட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கி துடைக்கும் போது தன்னை சுட்டுக்கொண்ட பிரபல நடிகர், ரசிகர்கள் ஷாக் | Actor Govinda Suffers Bullet Injury

இதனால், இவரின் காலில் பலத்த காயம் ஏற்பட, தற்போது மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றார்.