முக்கிய இடங்களில் படுதோல்வி.. ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட விஜய்யின் கோட்
Vijay
Trisha
Greatest of All Time
OTT Platforms
By Kathick
கோட்
நடிகர் விஜய் - இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான திரைப்படம் கோட். இப்படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்தது.
உலகளவில் ரூ. 430 கோடி வரை வசூல் செய்திருந்தாலும் கூட, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய இடங்களில் படுதோல்வியை கோட் படம் சந்தித்துள்ளது.
ஓடிடி ரிலீஸ்
வெளிநாடுகள், தமிழ்நாடு, கர்நாடாகா மற்றும் பாலிவுட் ஆகிய இடங்களில் மட்டுமே இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், கோட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வருகிற அக்டோபர் 3ஆம் தேதி GOAT திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும் என அறிவித்துள்ளனர்.