ஜனநாயகன் படம் வந்திருந்தால் மிகப்பெரிய தொகை சினிமாவிற்கு கிடைத்திருக்கும்.. வருத்தத்துடன் பேசிய பிரபல நடிகர்

Vijay JanaNayagan
By Kathick Feb 03, 2026 03:30 PM GMT
Report

ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காததாலும், இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது.

ஜனநாயகன் படம் வந்திருந்தால் மிகப்பெரிய தொகை சினிமாவிற்கு கிடைத்திருக்கும்.. வருத்தத்துடன் பேசிய பிரபல நடிகர் | Actor Ilavarasu Talk About Jananayagan

உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு, படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் சென்சார் போர்டு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் மீண்டும் ரிலீஸ் தள்ளிப்போனது. தலைமை நீதிபதி அமர்வில் இதற்கான விசாரணை நடந்தது.

இதன்பின் கடந்த 27ஆம் தேதி வெளிவந்த உத்தரவில், ஜனநாயகன் படத்திற்கு உடனடியாக சென்சார் வழங்க வேண்டும் என்கிற தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்வதற்காக அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

ஜனநாயகன் படம் வந்திருந்தால் மிகப்பெரிய தொகை சினிமாவிற்கு கிடைத்திருக்கும்.. வருத்தத்துடன் பேசிய பிரபல நடிகர் | Actor Ilavarasu Talk About Jananayagan

மேலும் ஜனநாயகன் திரைப்படத்தை மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போய்விட்டது. இப்படி தொடர்ந்து வழக்கு நடைபெற்று வருவதால், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.

இதனால், வழக்கை வாபஸ் வாங்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஜனநாயகன் படம் வெளிவராமல் போனதை குறித்து பலரும் தங்களது கருத்தை கூறினார்கள்.

ஜனநாயகன் படம் வந்திருந்தால் மிகப்பெரிய தொகை சினிமாவிற்கு கிடைத்திருக்கும்.. வருத்தத்துடன் பேசிய பிரபல நடிகர் | Actor Ilavarasu Talk About Jananayagan

இந்த நிலையில், பிரபல நடிகர் இளவரசு, ஜனநாயகன் வராதது குறித்து வருத்தத்துடன் பேட்டியளித்துள்ளார். இதில், பொங்கல் ரிலீஸ் போச்சு, 9ஆம் தேதி ஜனநாயகன் வந்திருந்தால் 18ஆம் தேதி வரை மிகப்பெரிய தொகைக்கு சினிமாவிற்கு கொடுத்திருக்கும். தயாரிப்பாளருக்கு, ஹீரோவுக்கு லாபம் என்பதை விட, அது சினிமாவுக்கும் உதவும். நானும் ஒன்றும் விஜய் பின்னால் போய் நிற்கப்போவதில்லை. ஆனால், படம் வராதது வருத்தம் என அவர் கூறியுள்ளார்.