60 வயதான நடிகர் கார்த்திக்கிற்கு என்ன ஆனது! வைரலாகும்தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படம்

hospital actor photo bjp karthik
By Jon Mar 23, 2021 02:56 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக். நவரச நாயகன் என்று தென்னிந்திய சினிமாவில் அழைக்கப்படும் கார்த்திக் தன் மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து அரசியலில் கட்சி பரப்புரையாளராகவும் பிஜேபி கட்சியில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மனித உரிமை காக்கும் கட்சியின் நிறுவனரும் நடிகருமான எம். கார்த்திக் சனிக்கிழமை நேற்று நட்சத்திர நாள் திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பிஜேபி அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில்,நேற்று இரவு அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு சென்னையிலுள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நடிகர் கார்த்திக்-க்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ‘நெகட்டிவ்’ ரிசல்ட் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூடிய விரைவில் குணமடைய பிரபலங்கள் ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.

  

GalleryGalleryGalleryGallery