புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை

Vijay Pawan Kalyan Actors
By Bhavya Mar 10, 2025 10:30 AM GMT
Report

ஷிஹான் ஹுசைன்

கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷிஹான் ஹுசைன். புன்னகை மன்னன் படத்தில் ஒரு ரோலில் சிறப்பாக நடித்து அசத்தினார்.

இப்படத்தை தொடர்ந்து வேலைக்காரன், மூங்கில் கோட்டை, உன்னை சொல்லி குற்றமில்லை என தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை | Actor Last Wish

வைத்த கோரிக்கை

இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் ஷிஹான் தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், "எனக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும், இன்னும் சில நாட்கள் தான் நான் உயிரோடு இருப்பேன்.

எனக்கு மன தைரியம் அதிகம், நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகர்.. விஜய்க்கு வைத்த கோரிக்கை | Actor Last Wish

பவன் கல்யாண் இங்கு வந்துதான் கராத்தே கற்றுக்கொண்டார், எனவே அவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். அதேபோல் விஜய்க்கு ஒரு கோரிக்கை, அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கு ஒரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.