சட்டம் தன் கடமையை செய்யும்!! பெண் யூடியூபரை வம்புக்கு இழுத்து கம்பி எண்ணும் சின்னத்திரை நாஞ்சில் விஜயன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியின் மூலம் பாப்புலராக இருப்பவர் நாஞ்சில் விஜயன். இவர் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தை பற்றி பேசி சர்ச்சையில் மாட்டி கொண்டார்.
இவருடன் சேர்ந்து சூர்யா தேவி என்ற யூடியூபரும் வனிதாவை மோசமான வார்த்தைகளால் திட்டினார். தன்னை அவதூறாக பேசியதால் சூர்யா தேவி மீது வழக்கு கொடுத்தார் வனிதா. இதனால் சூர்யா தேவியை போலீசார் கைது செய்தனர்.

அதற்கு பின் சூர்யா தேவி நான்கு ரவுடிகளை அனுப்பி தன்னை தாக்கியதாக நாஞ்சில் விஜயன் இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். பின்னர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சூர்யா தேவி மீது வழக்கு தொடுத்தார்.
நாஞ்சில் கைது
என்னை அவதூறாக பேசி மிரட்டுகிறார் என சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் மீது காவல் நிலையில் புகார் அளித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் விஜயன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணைக்கு போலீசார் பலமுறை சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆஜராகாமல் இருந்த நாஞ்சில் விஜயனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
