கருவிலேயே குழந்தையை கலைக்க சொன்ன நெப்போலியன்..திருமண வாழ்க்கை வேண்டாம் என்று ஓடிய மனைவி

Napoleon Tamil Cinema Actors Tamil Actors
By Dhiviyarajan May 31, 2023 02:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன் மற்றும் குணசித்ர ரோலில்களில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் தான் நெப்போலியன்.

இவர் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1993 -ம் ஆண்டு வெளியான 'கிழக்கு சீமையிலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நெப்போலியன் ஹீரோவாக நடித்ததை விட அதிகமாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எஜமான் படத்தில் மிரட்டல் வில்லனாக நெப்போலியன் நடித்திருந்தார். இந்த படத்தில் வில்லனாக நடித்ததை பார்த்து இவரது மனைவி திருமணம் செய்துகொள்ள கூட தயங்கினாராம்.

மேலும் எஜமான் படத்தில் நெப்போலியன் கருவில் இருக்கும் குழந்தை கலைக்க நினைப்பார். இந்த படத்தில் இருக்கும் காட்சியை நெப்போலியன் மனைவி பார்த்து விட்டு ' கருவில் இருக்கும் குழந்தை கலைக்க நினைப்பவரை திருமணம் சொல்றீங்களா" என்று கூறினாராம். இதை கேட்டவுடன் நெப்போலியன் அதிர்ச்சி அடைந்ததாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

You May Like This Video