மதுவுக்கு அடிமை! வாழ்க்கையை இழந்த நடிகர் பாண்டியன் மரணத்திற்கு இதுதான் காரணம்..
சினிமாவில் பல உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் போது புகழ் போதையில் செய்வது அறியாமல் எதேதோ செய்து வாழ்க்கையை கெடுத்துக்கொள்வார்கள். அப்படியான நிலைக்கு தள்ளபட்டவர்கள் வரிசையில் இருந்தவர் தான் நடிகர் பாண்டியன்.
பாரதிராஜாவின் பொக்கிஷம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளியில் வளையல் கடை வைத்திருந்த பாண்டியன் இயக்குனர் பாரதிராஜாவிடம் ஆட்டோகிராப் வாங்க சென்ற போது நடிக்க வரியா என்று கேட்டு சென்னைக்கு அழைத்து சென்றாராம் பாரதிராஜா.
1983ல் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான மண் வாசனை படத்தின் மூலம் அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் பாண்டியன். சுமார் 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்திருந்தார் பாண்டியன். சிட்டிசன் படத்தில் பாதிரியாராகவும், அன்பே உன் வாசம் போன்ற உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்தார். கடைசியாக புதுசு கண்ணா புதுசு என்ற படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
குடிக்கு அடிமை
அதே வருடமே உடல் நலக்குறைவால் மதுரையில் மரணமடைந்தார். மரணத்திற்கு என்ன காரணம் என்று பலர் கூறி வந்த நிலையில், நண்பர்களுடன் எப்போது விடாமல் அவர்களுக்காக வாழ்ந்தும் வந்தார். அப்போது மிதமிஞ்சிய மதுவுக்கு அடிமையாகினார்.
ஆனால் அப்படி இருந்த பாண்டியன் பணம் இல்லாத நேரத்தில் நண்பர்கள் கூட உதவி செய்யாமல் கை நழுவி விட்டார்களாம். மேலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய பாண்டியனின் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்பட்டு 2008ல் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
உச்சத்தில் இருந்து 49 வயதிலேயே மரணமடைந்தது தமிழ் திரையுலகிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பாண்டியன் இறப்பிற்கு பலர் இரங்கல் தெரிவித்த நிலையில் அவரை உருவாக்கி பாரதிராஜா மிகவும் கஷ்டப்பட்டு கண்ணீர் விட்டு அழுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.