நயன்தாராவின் படத்திற்கு சாபம் விடுத்த நடிகர்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பான பதிவு

Madhavan Siddharth Nayanthara
By Bhavya Apr 07, 2025 07:30 AM GMT
Report

டெஸ்ட்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா மற்றும் மாதவன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கும் டெஸ்ட் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெட்பிலிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாகி இருந்தது.

இந்த படத்தில் பிரபல நடிகர் எஸ்வி சேகர் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதன் பின் நீக்கப்பட்டுவிட்டாராம்.

நயன்தாராவின் படத்திற்கு சாபம் விடுத்த நடிகர்.. இணையத்தில் வைரலாகும் பரபரப்பான பதிவு | Actor Post About Nayanthara Movie Goes Viral

பரபரப்பான பதிவு 

இந்நிலையில், எஸ்.வி. சேகர், டெஸ்ட் படத்தின் ரிலீசுக்கு பிறகு அவர் ட்விட்டரில் ஒரு பதிவு போட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில், " டெஸ்ட் படத்தின் புகைப்படத்தை பகிர்ந்து அதன் கீழ், என்னை ஒரு படத்தில் புக் செய்த பின், நானாக விலகினாலோ, விலக்கப்பட்டாலோ அந்த படம் ரிலீசாகி தியேட்டருக்கு வராது.

வந்தாலும் நன்றாக ஓடாது. தற்போது வரலாறு தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவை கண்டு ரசிகர்கள் நயன்தாரா படத்திற்கு சாபம் கொடுக்கிறாரோ எஸ்.வி. சேகர் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.