விரைவில் திருமணம்.. வருங்கால மனைவிக்காக பிரபாஸ் என்ன செய்துள்ளார் பாருங்க!

Prabhas
By Karthick Raja Jul 10, 2026 11:30 AM GMT
Report

வருடா வருடம் நடிகர் பிரபாஸின் படங்கள் குறித்த செய்தி வைரலாகிறதோ இல்லையோ, அவரது திருமணம் பற்றி நிறைய செய்திகளும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் வலம் வரும்.

பான்-இந்தியன் ஸ்டாராக வலம் வரும் பிரபாஸ், ஹைதராபாத்தில் சுமார் ரூ. 200 கோடி செலவில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை போன்ற வீட்டை கட்டி வருகிறாராம். இரண்டு ஏக்கர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் வீடு தயாராகி வருகிறதாம்.

இந்த பிரம்மாண்ட வீட்டை நடிகர் பிரபாஸ் தனது வருங்கால மனைவிக்காக கட்டுவதாகவும், அடுத்த வருடம் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு வருடமும் பிரபாஸின் திருமண செய்தி வருவதும், பிறகு அது பொய்யாவது வழக்கமாக நடக்கிறது. இந்த முறையாவது திருமண செய்தி உண்மையா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.