சூப்பர் படம் ஆனால் கவுத்துவிட்ட வசூல், இப்படியாகிருச்சே விஜய் ஆண்டனி
Vijay Antony
Nooru Saami
By Tony
விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளர் ஆக அறிமுகமாகி கலக்கு கலக்கு என கலக்கினார்.
அதிலும் குறிப்பாக தளபதி விஜய்க்கு இவர் இசையமைத்த வேட்டைகாரன், வேலாயுதம் எல்லாம் இவரை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. ஆனால், நான் படம் மூலம் ஹீரோவான விஜய் ஆண்டனி தற்போது முழுவதும் நடிப்பில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நூறு சாமி படம் மிகப்பெரிய வரவேற்பை விமர்சகர்களால் பெற்றது.
ஆனால் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை, வெறும் ரூ 20 கோடி தான் இந்த படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது. விஜய் ஆண்டனி இந்த படத்தை மிகவும் நம்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.