தனது குடும்பத்தில் முக்கிய நபரை இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ்.... துக்கத்தில் குடும்பம்

Prakash Raj Tamil Cinema
By Yathrika Mar 30, 2026 06:30 AM GMT
Report

பிரகாஷ் ராஜ்

ஹாய் செல்ல, சவுக்கியமா என்று மைக்கை பிடித்து பேசினாலே போதும் அரங்கமே அதிரும். அந்த அளவிற்கு கில்லி படத்தில் வில்லனாக நடித்தாலும் செல்லம் செல்லம் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் பெரிய இடம் பிடித்துவிட்டார் பிரகாஷ் ராஜ்.

எந்த மொழி, எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்டாக நடித்து முடிப்பவர் பிரகாஷ் ராஜ்.

சினிமாவில் நடிப்பை வெளிப்படுத்துபவர் நிஜ வாழ்க்கையில் யாருக்கும் பயப்படாமல் மனதில் தோன்றிய விஷயத்தை தைரியமாக பேசக்கூடியவர்.

தற்போது இவரது வீட்டில் ஒரு சோகம் ஏற்பட்டுள்ளது. அதாவது பிரகாஷ் ராஜின் தாயார் ஸ்வர்ணலதா, 86 வயதில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

தனது குடும்பத்தில் முக்கிய நபரை இழந்த நடிகர் பிரகாஷ் ராஜ்.... துக்கத்தில் குடும்பம் | Actor Prakash Raj Mother Passes Away