2 மாதத்தில், சோகத்தில் முடிந்த திருமணம்!! விரைவில் அவருடன் நடிகர் பிரசாந்த் இரண்டாம் திருமணம்..
தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவரான நடிகர் தியாகராஜன், தன் மகன் பிரஷாந்தையும் சினிமாவில் நடிக்க அறிமுகப்படுத்தினார். 90களில் தன் நடிப்பாலும் அழகாலும் கவர்ந்து வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பில்லாமல் காணாமல் போனார். இடையில் அவரது திருமணம் வாழ்க்கை பிரச்சனையில் முடிய 5 ஆண்டுகள் வழக்குகளை சந்தித்து வந்தார். அதனை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து பிரசாந்த் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தற்போது நடிகர் விஜய்யின் கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்தும் வருகிறார். சில தினங்களுக்கு முன் தன் மகன் பிரசாந்த் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த BMW கார் பரிசாக அளித்திருந்தார் தியாகராஜன். கடந்த ஆண்டு பிரசாந்த் பிறந்த நாளுக்கு கொடுத்த பேட்டியொன்றில் தன் மகனின் திருமண வாழ்க்கை குறித்து பல விசயங்களை தியாகராஜன் பகிர்ந்திருந்தார்.
அதில், எனக்கு மிகப்பெரிய வருத்தம் அவன் கல்யாண விசயம் தான். நல்ல குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து வைத்தோம். ஆனால் அந்த பொண்ணு ஏற்கனவே கல்யாணமாகி, திருமண பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. என்ன நடந்தது என்று தெரியவில்லை, கல்யாணமான ஒன்றரை மாசத்தில் அந்த பொண்ணு வீட்டைவிட்டு போய்டுச்சி, அதன்பின் தொடர்பில் இல்லை. வரதட்சணை கேட்கிறோம் என்று சொல்லி எங்கள் மீது வழக்கு போட்டாங்க.
அதோட 5 வருஷம் பல நீதிமன்றம் சென்றார்கள். இதனால் 5 வருஷம் பிரஷாந்த் மன உளைச்சலில் இருந்தது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் விரைவ்ல் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் கடமை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் விரைவ்ல் பிரசாந்திற்கு திருமணம் செய்ய முடிவெடித்திருப்பதாகவும், சொந்தத்தில் பார்த்த பெண்ணை தான் திருமணம் செய்து வைக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த தகவல் பிரசாந்த் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.