அதுக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்!! சிவாவின் மறுப்பக்கத்தை உடைத்த நடிகர் பிரேம் குமார்..

Sivakarthikeyan Actors Tamil Actors
By Edward Apr 13, 2026 09:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மாஸ் நடிகராக உருவெடுத்து தன்னுடைய மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தி வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது சோயோன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதுக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்!! சிவாவின் மறுப்பக்கத்தை உடைத்த நடிகர் பிரேம் குமார்.. | Actor Prem Kumar Open About Sivakarthikeyan Help

சிவகார்த்திகேயன் குறித்து பலரும் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து வருவார்கள். அப்படி, சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நடிகர் பிரேம் குமார், சிவகார்த்திகேயன் தனக்கு செய்த உதவு கூறித்து பகிர்ந்துள்ளார்.

அதில் பிரேம் குமார், சிவகார்த்திகேயன் எனக்கு தம்பி மாதிரி. சினிமாவில் நடித்ததற்கு பின் அவர் எனக்கு பழக்கம். எனக்கு சிவகார்த்திகேயன் செய்த ஒரு உதவி, யார் பண்ணுவார்கள் என்பது மாதிரி. இதுகுறித்து சொல்ல ஒரு மேடை தேடிக்கொண்டிருந்தேன், சிவாவுடன் நடித்துவிட்டு ஒரு ஆடியோ லான்ச்சில் சொல்லலாம் என்று 2019ல் இருந்து காத்திருக்கிறேன். இப்போது அதை கூறுகிறேன்.

சிவகார்த்திகேயன்

என் 2வது பையனுக்கு படிக்க நெதர்லாந்தில் சீட் கிடைத்தது. எஜிகேஷன் லோன் போட்டேன் கிடைக்கவில்லை, ஏனென்றால் உத்திரவாதம்(surety) கொடுக்க என்னிடம் வீட்டு பத்திரம் தான் இருந்தது, அது ஏற்கனவே EMIல இருப்பதால் வாங்கமுடியவில்லை.

அதுக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம்!! சிவாவின் மறுப்பக்கத்தை உடைத்த நடிகர் பிரேம் குமார்.. | Actor Prem Kumar Open About Sivakarthikeyan Help

உடனே தம்பி சிவகார்த்திகேயனிடம் சென்று கூறினேன். ஒன்னுமே கேட்கவில்லை, உடனே ஒரு வங்கியில் 50 லட்சம் ரூபாயை ஃபிக்ஸட் டெபாசிட் முறையில் எனக்கு கொடுத்தார். அதெல்லாம் ரொம்ப ரொம்ப பெரிய விஷயம், அதை கொடுக்காமல் இருந்தாலும் அதை பற்றி அவர் கவலைப்படவில்லை. அதன்பின் திருப்பி கொடுத்துவிட்டோம். இது உதவி கிடையாது, வாழ்க்கை.

என் பையன் இப்போது மாதம் ரூ. 4 , 5 லட்சம் சம்பாதிக்கிறான் என்றால் அதற்கு காரணம் சிவா. அதேபோல் காப்பான் படத்தில் நடிக்கும் போது கனி என்னுடனே இருப்பான். அவன் உடனே அக்கவுண்ட் நம்பர் கேட்டு 5 லட்சம் கொடுத்தான். இருவருக்கும் நான் ரொம்பவே கடமை பட்டிருக்கிறேன் என்று பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.