சினிமாவில் இருந்து விலகி துறவி வாழ்க்கைக்கு சென்ற ரஜினிகாந்த்.. தீக்குளிக்க சென்ற ரசிகர்கள்

Rajinikanth
By Dhiviyarajan Mar 10, 2023 05:30 PM GMT
Report

இன்றும் என்றும் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் ஆரம்பத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து பின்னர் அனைத்து தரப்பு மக்களாலும் ரசிக்கப்படும் நடிகராக உருமாறினார்.

பல வெற்றி படங்களை கொடுத்து புகழ் உச்சிக்கு சென்ற ரஜினிக்கு பல பிரச்சனைகளும் காத்திருந்தது. இவர் பிரபலமான பிறகு பொது இடங்களில் சரியாக செல்ல முடியாமல் நிம்மதி இல்லாமல் மனவுளைச்சலுக்கு ஆளானார்.

சினிமாவில் இருந்து விலகி துறவி வாழ்க்கைக்கு சென்ற ரஜினிகாந்த்.. தீக்குளிக்க சென்ற ரசிகர்கள் | Actor Rajinikanth Past Life

அப்போது ரஜினிகாந்த் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தார் அது என்னவென்றால் சினிமாவில் இருந்து விலகி யாருக்கும் சொல்லாமல் துறவறம் சென்று விட திட்டம் போட்டுள்ளார்.

இந்த விஷயத்தை இவரை அறிமுகம் படுத்திய பாலச்சந்தரை சந்தித்து கூறியுள்ளார். அப்போது பாலசந்தர் ரஜினியிடம், சரி துறவறம் போ. உனக்கு சினிமாவில் நடிக்க ஆசை இருந்தால் திரும்பி வா என்று சொல்லியிருக்கிறார்.

சினிமாவில் இருந்து விலகி துறவி வாழ்க்கைக்கு சென்ற ரஜினிகாந்த்.. தீக்குளிக்க சென்ற ரசிகர்கள் | Actor Rajinikanth Past Life

ரஜினிகாந்த் துறவறம் செல்லும் விஷயத்தை அறிந்த அவரின் ரசிகர்கள் போயஸ் கார்டனில் இருக்கும் வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டு வந்துள்ளனர்.

அப்போது ரசிகர் ஒருவர் மன்னனை எடுத்து ஊற்றி கொண்டு தீக்குளிக்க சென்றுள்ளார். இதை பார்த்து மிரண்டு போன ரஜினிகாந்த், நான் கடைசி வரை படம் நடிப்பேன் என்று கூறி ரசிகர்களை அங்கு இருந்து அனுப்பினார்களாம். இவ்வாறு பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். 

சினிமாவில் இருந்து விலகி துறவி வாழ்க்கைக்கு சென்ற ரஜினிகாந்த்.. தீக்குளிக்க சென்ற ரசிகர்கள் | Actor Rajinikanth Past Life