பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கே இந்த நிலைமையா, நோ சொன்ன இளம் நடிகர்
Shankar Shanmugam
By Tony
ஷங்கர் ஒரு காலத்தில் இவர் இயக்கத்தில் நடிக்க இந்தியாவில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் பலரும் போட்டி போட்டு வருவார்கள்.
ஆனால் இவரின் இந்தியன் 2, கேம் சேஞ்சர் படத்தின் தோல்வி ஷங்கர் மார்கெட்டை கடுமையாக பாதித்துள்ளது. இனி இவர் இயக்கத்தில் நடிக்கலாமா என பலரும் ஒதுங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஷங்கர் வேள்பாரி பிரமாண்ட படத்தை எடுப்பதற்கு முன்பு சிறு பட்ஜெட்டில் ஒரு ஆக்ஷன் படத்தை எடுத்து விடலாம் என நினைத்துள்ளாராம், அதற்கான வேலையில் இறங்கி தனுஷிடம் கதை சொல்ல போக, அவரோ வேண்டாம் சார் என டீசண்ட் ஆக தன்னிடம் உள்ள லைன் அப் காட்டி மறுத்ததாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எவ்ளோ பெரிய ஆள் என்றாலும் எல்லாம் மார்கெட் இருக்கும் வரை தான் என விஷயம் அறிந்தவர்கள் சொல்லி நகர்கின்றனர்.