விஜய் சேதுபதி அப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை!! சீரியல் நடிகை ஐஸ்வர்யா..

Vijay Sethupathi Serials Actors Tamil Actress Actress
By Jai Sep 20, 2026 06:00 AM GMT
Report

ஐஸ்வர்யா

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா. 15 வயதில் சீரியலில் நடிக்க ஆரம்பித்தவர், விருப்பட்டு நடிக்க வராததால் அப்போதெல்லாம் ஷூட்டிங் போகமாட்டேன் என்று அழுதும் இருக்கிறார்.

விஜய் சேதுபதி அப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை!! சீரியல் நடிகை ஐஸ்வர்யா.. | Annamalai Serial Aishwarya About Vijay Sethupathi

அதன்பின் குடும்ப சூழ்நிலையால் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா, அண்ணாமலை சீரியலில் ஜோதி என்ற ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தெலுங்கி சீரியல் ஆஃபருக்காக, வெள்ளித்திரை வாய்ப்பை வேண்டாம் என்று கூறி கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டு சீரியல் வாய்ப்பே போதும் என்று இருந்துள்ளார்.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்த பெண் சீரியலில் நடித்தும் இருக்கிறார். மகாராஜா படத்தின் பிரமோஷனின் போது ஐஸ்வர்யாவின் தங்கை விஜய் சேதுபதியிடம் அவர் பற்றி பேச, உடனே வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி அப்படி பேச வேண்டிய அவசியமே இல்லை!! சீரியல் நடிகை ஐஸ்வர்யா.. | Annamalai Serial Aishwarya About Vijay Sethupathi

இந்நிலையில், சமீபத்தில் ஐஸ்வர்யா அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி என்னிடம் பேசியது ரொம்ப சந்தோஷம். நான் டைம் லைட்டில் கூட இல்லை, அப்படி இருக்கும்போது அவர் எனக்காக வீடியோ கால் செய்து, பழைய விசயங்களை எல்லாம் பேச வேண்டிய அவசியமே இல்லை, ஆனாலும் அவர் போன் பண்ணுனார். அவர் ரொம்ப எளிமையானவர் என்று பெருமையாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா.