நான் 7முறை தற்கொலை முயற்சி செய்தேன்..ஆனால்.. அதிர்ச்சி கொடுத்த செல்வராகவன்..
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வரும் இயக்குநர் செலவராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி பிஸியாக இருந்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து அவ்வப்போது தத்துவம் பேசி வரும் செல்வராகவன், வாழ்க்கை தத்துவத்தை சமீபத்தில் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.
7முறை தற்கொலைக்கு முயற்சி
இந்த உலகத்துல வாழ்கிற அனைவருக்கும் இந்த இரண்டு விதமான அனுபவத்தை அனுபவித்தவர்களாக இருப்பார்கள். ஒன்று தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். இதை நானும் அனுபவித்து இருக்கிறேன். நான் ஒருமுறை அல்ல ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்.
ஒவ்வொரு தற்கொலை முயற்சியின் போதும் மனசுக்குள் ஒரு குரல் கேட்கும், ஏதோ சொல்றமாதிரி, ஏதோ கேக்க்குறமாதிரி ஒரு உணர்வு இருக்கும். 10 நாள் கழித்தோ அல்லது 6 மாதம் அல்லது ஒரு ஆண்டுகள் கழித்துக்கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் நாம் ஆசைப்பட்டது போல மாறலாம்.
அப்போது தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன். வாழ்க்கையே அதுதான்.
தற்கொலை செய்ய முயற்சி செய்து வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைப்பவர்களின் உண்மையான நோக்கம் என்னவென்றால் அடுத்த ஜென்மத்திலாவது நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்ற நம்பிக்கையே என்று செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வீடியோவில் பேசி அதை பகிர்ந்திருக்கிறார்.