எவ்வளவு ரேட்! தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் ஏமாற்றுகிறார்கள்! பிரபல நடிகர்..

boxoffice pushpa tamilactor siddarth preoducers
By Edward Dec 22, 2021 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கி பெரிய வெற்றி கொடுத்த படம் பாய்ஸ். இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியர்களில் ஒருவர் சித்தார்த். இதன்பின் மணிரத்னம் படமாக ஆயுத எழுத்து படத்தில் நடித்து பிரபலமாகி அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, நிதி படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

இடையில் நடிகை சமந்தாவுடன் காதல் என சர்ச்சையிலும் சிக்கி வந்த சித்தார்த் தற்போது படங்கள் எதுவும் இல்லாமல் சமுகவலைத்தளத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார். சமுக கருத்துக்களை கூறுவதோடு சில பிரச்சனையையும் உருவாகி பேசி வருகிறார் என்று பலர் விமர்சித்தும் வருகிறார்கள்.

இந்நிலையில் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் குறித்த கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ளார். ஒரு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட பிஆர்வோ சிலர் எவ்வளவு ரேட் கமிஷனாக பெற்று வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

மேலும் முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் தான் பாக்ஸ் ஆபிஸ் குறித்து இதை செய்து வந்தார்கள். தற்போது அனைத்து மொழிகளிலும் துறைக்களிலும் வர்த்தக பணியாளர்கள் மற்றும் மீடியாக்கள் இதை அதிகாரபூர்வமாக செய்து வருகிறார்கள்.

நேர்மையில்லாத பாண் இந்தியர்கள் என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இதற்கு காரணம் புஷ்பா படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 4 நாள் வசூலாக 2003 கோடி என்று சக்ஸ்ர்ஸ் மீட்டிங்கில் தொகுப்பாளினி கூறியதை வைத்து தான் இருக்குமோ என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.