நடிகர் சிம்புவின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? அவரே கூறியுள்ளார் பாருங்க

Silambarasan
By Karthick Raja Apr 22, 2026 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் அடுத்ததாக அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உடல் எடை கூடி காணப்பட்ட நடிகர் சிம்பு பல விதமான விமர்சனங்களை எதிர்கொண்டார். இதன்பின், தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறினார். இது பலருக்கும் மோட்டிவேஷனாக அமைந்துள்ளது.

நடிகர் சிம்புவின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? அவரே கூறியுள்ளார் பாருங்க | Actor Simbu Fitness Secret

இந்த நிலையில், தனது உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள சிம்பு என்ன செய்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக இப்போதும் நிறைய டயட் இருக்கிறாராம். தனது உடம்பிற்கு செட் ஆகாத உணவுகளை தவிர்த்து உணவில் நிறைய மாற்றம் கொண்டு வந்துள்ளார்.

சமீபத்தில் பேட்டியில் இதுகுறித்து பேசிய அவர், "அசைவம் சாப்பிட்ட பிறகு நான் மிகவும் சோர்வாகவும் மந்தமாகவும் உணர்ந்ததால் சைவ உணவிற்கு மாறினேன். சைவம் சாப்பிடும்போது உடல் மிகவும் லேசாக இருப்பதை உணர்கிறேன். ஒரு குறிப்பிட்ட வயது வரை நாம் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம், ஆனால் ஒரு வயதிற்கு பிறகு நாம் கொஞ்சம் கவனத்துடன் இருக்க வேண்டும்.

நடிகர் சிம்புவின் ஃபிட்னஸ் சீக்ரெட் என்ன தெரியுமா? அவரே கூறியுள்ளார் பாருங்க | Actor Simbu Fitness Secret

எனக்கு சோறு சாப்பிட மிகவும் பிடிக்கும், ஆனால் அது இரத்தத்தில் சர்க்கரை அளவை உணர்த்துகிறது, எனவே நான் முதலில் காய்கறிகளை சாப்பிட்டுவிட்டு அதன்பிறகு சோறு சாப்பிடுகிறேன்" என கூறியுள்ளார்.