மீண்டும் மீண்டும் பிரச்சனை.. சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய சிம்பு!!
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின்னர் கொரோனா குமார் என்ற படத்தை தயாரிக்க சிம்புவுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு இருந்தார் ஐசரி கணேஷ். ஆனால் சிம்பு அந்த படத்தில் நடிக்காமல் வெவ்வேறு படங்களில் நடித்து வந்ததால் அவர் மீது ஐசரி கணேஷ் புகார் கொடுத்தார்.
இந்த பிரச்சனை இப்படி சென்று கொண்டு இருந்த நிலையில் இயக்குனர் பி ஆர் மாதவன் சொன்ன கதை சிம்புவிற்கு பிடித்து போக, அந்த கதையை ஐசரி கணேசனிடமும் கூறியிருக்கின்றனர்.
சரி இந்த படத்தை பண்ணலாம் என்று முடிவு எடுத்த பின், வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சம்பள விஷயத்தில் சிம்பு கறாராக நிற்கிறாராம்.
தனக்கு போட்டியாக இருக்கும் தனுஷுக்கு சமமாக சம்பளம் வேண்டும் என்று சிம்பு கேட்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.