ஜாதி பாகுபாடு.. விஜய் டிவி மீது காமெடி நடிகர் நாஞ்சில் விஜயன் பரபரப்பு குற்றச்சாட்டு!
நாஞ்சில் விஜயன்
விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமானவர்கள் பலர். அப்படி காமெடி சீன்கள் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்து அதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நாஞ்சில் விஜயன்.

பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்நிலையில் தற்போது நாஞ்சில் விஜய் டிவி பற்றி ஒரு அதிர்ச்சி புகார் கூறி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் கடந்த 15 வருடமாக விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாருமே போடா தயங்கக்கூடிய பெண் வேடத்தையும் நான் துணிச்சலாக போட்டு மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.
விஜய் டிவியில் பணிபுரியக்கூடிய சில கலைஞர்களுக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்தினை விஜய் டிவி சமூக வலைதளத்தின் மூலமாக தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஆனால் என்னுடைய பிறந்த நாளும் கடந்த வாரம் தான் நடந்தது. ஆனால் எனக்கு ஒரு வாழ்த்தை நீங்கள் கூறவில்லை. மறந்து விட்டீர்களா இல்லை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டீர்களா.
அந்த காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து உயர்ஜாதி கீழ் ஜாதி என்று பிரித்தார்கள். இப்போது நீங்கள் செய்வதும் கிட்டத்தட்ட அது போல் தான் இருக்கிறது" என பதிவிட்டுள்ளார்.