வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது!..விஜய்யை சீண்டிய சூர்யா..ஆதரவு கொடுக்கும் நெட்டிசன்கள்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் விஜய். சமீபத்தில் 10-ம் மற்றும் பிளஸ்2 தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்வு சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விஷயத்தை விஜய் அரசியல் வருகைகாக செய்தார் என்று பல விமர்சங்கள் எழுந்தது.
பிரபல நடிகர் சிவகுமார் 1979-ம் ஆண்டு கல்வி அறக்கட்டளையை ஆரம்பித்தார். இதன் மூலம் பல மாணவர்களை படிக்க வைத்துள்ளார். இவருக்கு அடுத்து கல்வி அறக்கட்டளையை அவருடைய மகன் சூர்யா பார்த்து கொண்டு வருகிறார்.
இந்த ஆண்டு பெற்றோரை இழந்த 12-ஆம் வகுப்பு மனைவி, மாணவர்களுக்கு மேல் படிப்பிற்கான கல்வி உதவி தொகையை வழங்கினார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, கல்வி என்பது வெறும் மார்க் மட்டும் அல்ல. கல்வி மூலமாக வாழ்க்கையை படிங்க. வாழ்க்கையில் கல்வி தான் ரொம்ப முக்கியமான ஒன்று என்று கூறியுள்ளார். முதலிடம் பிடித்த மாணவர்களாக இல்லாமல், கல்வி கற்ற சூழ்நிலையை பொறுத்து மாணவர்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என்றும் பேசியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு, விஜய்முதல்மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதை தாக்கி பேசியது போல் உள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.