விஜயகாந்துக்கு கால் பிடித்துவிட்ட வைகைபுயல்!! ஆணவத்தில் ஆடியதால மரண அடி வாங்கிய வடிவேலு..
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட்-ஆக திகழ்ந்து வந்த கவுண்டமணி - செந்தில் காம்போவுக்கு பின் கொடிக்கட்டி பறந்த நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று பலரால் புகழப்பட்ட்டு உச்சத்தில் இருந்த வடிவேலு, சில காரணங்களால் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டார்.
வைகை ரீஎண்ட்ரி
சமீபத்தில் அந்த பிரச்சனை எல்லாம் முடிந்து மீண்டும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 போன்ற படங்கள் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து வருகிறார். சமீபத்தில் வடிவேலுவுடன் நடித்த நடிகர்கள் அவரை பற்றி விமர்சித்து பேசி வருகிறார்கள். அப்படி, வடிவேலுவுடன் நெருக்கமாக பழகிய அவரது நண்பர் நடிகர் தியாகு பல விசயங்களை பகிர்ந்து வந்துள்ளார். அப்படி கடந்த ஆண்டு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்து பல ரகசியமாக உண்மைகளை கூறியுள்ளார்.
விஜய்காந்த் - வடிவேலு
காசு கையில் வந்தால் தன்னலம் தெரியாமல் நடந்து கொள்வார்கள். அப்படித்தான், விஜய்காந்த் - வடிவேலு சண்டைக்கு காரணம். விஜயகாந்த் படத்தில் அவருக்கு குடை பிடித்தவன் வடிவேலு என்றும் அதற்காக 250 ரூபாய் சம்பளமாக பெற்று விஜயகாந்துக்கு கால் அமிக்கி விடுவான். அதன்பின் விஜய்காந்த் இருக்கும் இடத்தின் எதிரிலேயே ஒரு வீடை வாங்கினான் வடிவேலு என்றும் விஜயகாந்த் கார் அவர் வீட்டின் முன் நின்றதை உடனே எடு என்று ஆணவத்தில் வடிவேலு ஏதோ பேசியிருக்கிறான். இதனால் கோபத்தில் விஜயகாந்த் தொண்டர்கள் வடிவேலுவை வெளுத்து வாங்கிவிட்டார்கள். இரவு எனக்கு கால் செய்து இப்படியாகிவிட்டது என்று எதாவது பண்ணு என்று கேட்டான்.
தியாகு
உடனே கலைஞர் கருணாநிதிக்கு கால் செய்து பேசினேன். பின் ஸ்டாலின் எனக்கு கால் செய்து ஏன் அவருக்கு இரவில் கால் பண்ணீர்கள் என்று கேட்டார் என தெரிவித்துள்ளா நடிகர் தியாகு.
பின் நாஞ்சில் குமரன் என்கிற கமிஷ்னரிடம் கூறி வடிவேலுவை காப்பாற்றினேன். அதன்பின் விஜயகாந்துடன் நான் பேசுவதையே நிறுத்திவிட்டேன் என்று தெர்வித்துள்ளார் நடிகர் தியாகு. இவரை அடுத்து வடிவேலுவுடன் நடித்த பல நடிகர்கள் வைகைப்புயலை கடுமையாக திட்டியும் தங்களை வளரவிடாமல் தடுத்தவர் என்றும் பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.