ஏவிஎம் முன் பீடா கடை போட்ட நடிகர் விக்னேஷ்! 500 கோடிக்கு ஆசைப்பட்டு இப்படி ஆகிட்டாரே?

bharathiraja vignesh tamilactor kizhakkusemaiyile
By Edward Mar 28, 2022 02:40 PM GMT
Report

90களில் சினிமாவில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்று பல கஷ்டங்களை சந்தித்தவர் நடிகர் விக்னேஷ். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விக்னேஷ், சின்னத்தாயி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

பாரதிராஜா வளர்த்த கிடா:-

இயக்குனர் பாரதிராஜா வளர்த்து விட்ட நடிகர்களில் ஒருவராகவும் விக்னேஷ் திகழ்ந்தார். கிழக்கு சீமையிலே படத்தில் அவர் நடிப்பு சிறப்பாக அமைந்து படமும் மிகப்பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து மனதிலே ஒரு பாட்டு, செல்லக்கண்ணு உள்ளிட படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரியளவில் பேசப்படாமல் இருந்து வந்தார்.

பீடா கடை:-

எப்படியாவது சினிமாவில் ஒரு நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று நினைத்து ஏவிஎம் ஸ்டுடியோவில் பீடா கடை போட்டு பிழைப்பினை நடத்தினார். நடிப்பு ஆசையால் அந்த கடையால் சினிமா இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் சந்தித்தும் வந்திருக்கிறார்.

இதன்பின் இயக்குனர் பாலாவின் சேது பட கதையில் வேறொரு டைட்டிலில் பூஜை போடப்பட்டு படம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தான் ஒரு நல்ல ஒரு இடத்திற்கு வரமுடியாததால், அந்த மாதிரியான படங்களின் வாய்ப்பு கிடைத்தும் அதை தூக்கி எறிந்து வந்தார்.

தற்போது குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தும் ரோஜா, வைதேகி காத்திருந்தால் போன்ற சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

மோசடியில் சிக்கிய விக்னேஷ்:-

இத்தனை கோடி ரூபாய் கொடுத்தால் 500 கோடி கிடைக்கும் என்று கூறி ஒருவர் ஏமாற்றியுள்ளாராம். நட்பாக பழகி வந்த ராம்பிரபு ஒருவர் 1.81 கோடி ரூபாயை அவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தின் பாணியில் இப்படி எமாற்றமடைந்த விக்னேஷ் தற்போது சோகத்தின் பிடியில் இருந்து வருகிறார்.