இளையராஜாவுக்கே ஆப்பு வைத்த SaReGaMa!! 134 படத்துக்கு உரிமை கிடையாதாம்...

Ilayaraaja Cinema News
By Jai Jul 01, 2026 09:45 AM GMT
Report

1976 - 2001 வரையிலான காலக்கட்டத்தில் வெளியான 134 படங்களின் பாடல்களுக்கான காப்புரிமை, அந்த படங்களின் தயாரிப்பாளர்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சரிகம நிறுவனம் வாதிட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துஷார் ராவ், கெடேலா, இளையராஜாவுக்கு ஏற்கனவே எதிராக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உறுதி செய்தனர்.

இளையராஜாவுக்கே ஆப்பு வைத்த SaReGaMa!! 134 படத்துக்கு உரிமை கிடையாதாம்... | Ilaiyaraaja Cannot Claim Rights To Songs 134 Films

இளையராஜா, இந்தப் பாட்லகளை அமேசான் மியூசிக், ஐடியூன்ஸ், ஜியோ சாவன் உள்ளிட்ட தளங்களில் பதிவேற்றியதையும், அப்பாடல்கள் மீது உரிமை கோரியதையும் எதிர்த்து சரிகம நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

இந்திய காப்புரிமைச் சட்டம் 1957ன் படி ஒரு தயாரிப்பாளர், இசையமைப்பாளருக்கு ஊதியம் வழங்கி இசையை உருவாக்கச் சொல்லும்போது, அப்படைப்பின் முதல் உரிமையாளார் தயாரிப்பாளரே ஆவார் என்றும் தயாரிப்பாளர்கள் அந்த உரிமையை சரிகம நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதால், இளையராஜா அதன்மீது உரிமை கோர முடியாது என்றும் சரிகம தரப்பில் வாதிட்டனர்.

இளையராஜாவுக்கே ஆப்பு வைத்த SaReGaMa!! 134 படத்துக்கு உரிமை கிடையாதாம்... | Ilaiyaraaja Cannot Claim Rights To Songs 134 Films

134 படங்களின் பாடலுக்கு

அதன்படி, இசைஞானி இளையராஜா, அன்னக்கிளி, 16 வயதினிலே உள்ளிட்ட 134 படங்களின் பாடலுக்கு உரிமை கோர முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முள்ளும் மலரும், 16 வயதினிலே, நெற்றிக்கண் உள்ளிட்ட 134 படங்களின் பாடல்களை பயன்படுத்தவோ, உரிமம் பெறவோ இளையராஜாவுக்கு உரிமையில்லை.

பதிப்புரிமை, சரிகம நிறுவனத்திற்கு சாதகமான இடைக்கால தடையை நீக்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. சரிகம இந்தியா லிமிடேட் நிறுவனம், இளையராஜாவுக்கு எதிராக தொடர்ந்த காப்புரிமை வழக்கில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது டெல்லி உயர்நீதிமன்றம்.

இந்த தடையை நீக்க இளையராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், இவ்வழக்கு முடியும் வரை அந்த 134 படங்களின் பாடல்களை இளையராஜா வணிக ரீதியாக பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.