அடேங்கப்பா நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா...

Vijay Thamizhaga Vetri Kazhagam Net worth
By Yathrika Mar 31, 2026 03:30 AM GMT
Report

நடிகர் விஜய்

கோடி கோடியாக சம்பளம் கொடுக்கும் சினிமா வேண்டாம், என்னை வாழ வைத்த மக்களுக்காக நான் ஏதாவது செய்ய வேண்டும் என அரசியலில் களமிறங்கி சாதித்து வருபவர் தான் நடிகர் விஜய்.

வரும் ஏப்ரல் 23, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தலில் போட்டிபோடும் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

அடேங்கப்பா நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா... | Actor Vijay Full Net Worth Details

நடிகர் விஜய் ரெம்பலூரில் தாக்கல் செய்துவிட்டார், அதில் அவரது சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. முழு விவரம் இதோ,

தங்கம், வெள்ளி, வைரம், சொகுசு கார்கள் உட்பட தன்னிடம் இருக்கும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் பட்டியலிட்டு இருக்கும் விஜய் அதன் மதிப்பு ரூபாய் 404.58 கோடி ரூபாய் என தெரிவித்துள்ளார்.

அசையா சொத்துக்கள் சுமார் 115 கோடி ரூபாய் மதிப்பில் தனக்கு சொந்தமாக இருப்பதாக விஜய் குறிப்பிட்டுள்ளார். மொத்தமாக 537 கோடி ரூபாய் சொத்து தன்னிடம் இருப்பதாக விஜய் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.