56 வயதில் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா
Jammu Kashmir CM Omar Abdullah second marriage: ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பத்திரிகையாளரான நிதி ரஸ்தானை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
உமர் அப்துல்லா
ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கடந்த 1994-ஆம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பாயல் நாத் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜாமின், ஜாஹிர் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த சூழலில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2009-ஆம் ஆண்டில் இருந்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இந்த தம்பதிக்கு இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
இரண்டாவது திருமணம்
விவாகரத்து பெற்ற 2 மாதங்களுக்கு பின், முதலமைச்சர் உமர் அப்துல்லா பத்திரிகையாளரான நிதி ரஸ்தானை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

மேலும், தனது திருமணம் குறித்த செய்தியை உமர் நேற்று தனது சமூக வலைத்தளங்களில் அறிவித்தார். இந்த பதிவில், நிதி ரஸ்தானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து, 'நேற்று ஒரு புதிய பயணம் தொடங்கியது' என பதிவிட்டுள்ளார்.
