போலீசாரிடம் மாட்டிக்கொண்ட நடிகர் விஜய் - நடந்தது என்ன
தமிழ் நாட்டின் பிரபல நடிகராக இருப்பவர் தளபதி விஜய். 1992 ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்னும் படத்தின் மூலம் திரைத்துறையில் எண்ட்ரி கொடுத்தார்.
தற்போது விஜய், தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 30-து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைதொடர்ந்து இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
நண்பர்கள்
விஜய் தனது நெருங்கிய நண்பர்களுடன் எடுக்கும் புகைப்படம் சில சமயங்களில் இணையத்தில் வைரல் ஆகிவிடும். விஜயின் நண்பர்கள் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோரும் பல படங்களில் நடித்துள்ளனர்.

லைசென்ஸ் இல்லை
சமீபத்தில் ஸ்ரீநாத் விஜய் பற்றிய தகவலை பகிர்ந்துள்ளார். அதில்," என்னுடைய பைக்கில் நானும் விஜயும் அண்ணாசாலையில் சென்று கொண்டிருந்தோம். அப்போது அந்த வழியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
என்னிடமும் விஜய்யிடமும் லைசென்ஸ் இல்லாததால் நாங்கள் போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம். அந்த காலகட்டத்தில் விஜய் சினிமாவில் நடிக்கவில்லை. அதனால் நாங்கள் விஜய்யின் தந்தை இயக்குனர் சந்திரசேகர் பெயரை சொல்லி தப்பித்து விட்டோம்" என்றார்.
