நான் பல பெண்களுடன் உறவு வைத்துள்ளேன்.. திமிரு பட நடிகரின் சர்ச்சை பேச்சு
conterversey
vinayagan
By Kathick
விஷால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திமிரு. இப்படத்தில் முக்கிய வில்லன்களில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தவர் நடிகர் விநாயகம். இவர் மலையாளத்தில் பல திரைப்படம் நடித்து சிறந்த நடிகர் என்ற அந்தஸ்தை கொண்டுள்ளார். சமீபத்தில் நடிகர் விநாயகன் கொடுத்த பேட்டி, தற்போது திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அவர் கூறியதாவது : "ஒரு பெண்ணை பார்க்கும் போது அந்த பெண்ணை எனக்கு பிடித்திருந்தால், நான் அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று கேட்பேன். அவர் விருப்பம் தெரிவித்தால் அவருடன் உறவு வைத்து கொள்வேன். இப்படி நான் பலரிடம் உறவு வைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேட்டிக்கு பல்வேறு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெண்கள் அமைப்பும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.