மறைந்த நடிகர் விவேக் நடித்து வெளியாகாமல் இருக்கும் படங்கள்! இந்த லிஜெண்ட்டரி படமுமா?

death vivek last movies legent saravana
By Jai Apr 19, 2021 02:39 PM GMT
Report

கடந்த வாரம் இந்திய சினிமாவில் ஆழ்ந்த சொகத்தில் ஏற்படுத்தியது காமெடி நடிகர் விவேக்கின் மறைவு தான். மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேக் 17 ஏப்ரல் காலை 4.35 மணியளவில் மரணமடைந்தார்.

இந்நிலையில் விவேக் நடிப்பில் அடுத்தடுத்து என்னென்ன படங்கள் திரைக்கு வர உள்ளது என்பதை பார்ப்போம். விவேக் சினிமாவுக்கு வந்து இத்தனை வருடத்தில் இதுவரை கமல்ஹாசனுடன் இணைந்து நடித்ததே இல்லை. ஆனால் இந்தியன் 2 படத்தில் இருவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்த நடித்து வந்தனர்.

ஆனால் அந்த படம் நிறுத்தப்பட்டதால் தற்போது அந்தப் படத்தில் விவேக் நடித்த காட்சிகளை என்ன செய்வார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அடுத்தது சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் என்பவர் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படத்திலும் காமெடி நடிகராக நடித்து வருகிறார்.

பெயரிடப்படாத சில படங்களிலும் விவேக் நடித்துள்ளாராம். கடைசியாக விவேக் பனிப் பிரதேசத்தில் சரவணன் அருள் படப்பிடிப்பில் இருந்து பல வீடியோக்களை வெளியிட்டார். அந்தப்படமும் அடுத்ததாக வெளியாக உள்ளது. மேலும் நடிகர் விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படமும் வெளியாகவுள்ளது.