சில்க் ஸ்மிதாவையும் விட்டுவைக்காத 40 வயது வாரிசு பட நடிகர்!! உண்மையை உடைத்த தந்தை..
தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சி புயலாக 80, 90 காலக்கட்டத்தில் கொடிக்கட்டி பறந்து வந்த நடிகை சில்க் ஸ்மிதா. தன் கவர்ச்சி ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்து வந்த சில்க் ஸ்மிதாவை ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

சிரியவர்கள் முதல் பெரியவர்கள் அவர் நடித்த படம் வந்தாலே போது வரிசைக்கட்டி நிற்பார்கள். அப்படி சிலர் அவரை திருமணம் செய்யவும் ஆசைப்பட்டு அவரை நெருங்குவார்கள். தன் உடலை பார்த்து அல்லாமல் தன் மனதை பார்க்கும் மனிதர்களையே சில்க் ஸ்மிதா விரும்புவாராம்.
அந்தவகையில் வாரிசு நடிகர் ஒருவர் சிறுவயதில் சில்ஸ் ஸ்மிதாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டுள்ள செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் இசையமைப்பாளராகவும் திகழ்ந்து வந்த கங்கை அமரன் வண்டிச்சக்கரம் படத்திற்கு பிறகு அலைகள் ஓய்வதில்லை படத்தில் சில்க் ஸ்மிதா நடித்திருந்தார்.

அப்போது கங்கை அமரன் வீட்டில் தான் சில்க் ஸ்மிதா சென்று வருவாராம். இதுகுறித்து கங்கை அமரன் பேட்டியொன்றில், எனக்கு போன் செய்து அழைத்து என்னுடைய வீட்டிற்கு செல்வதை சில்க் ஸ்மிதா வழக்கமாக வைத்திருந்ததாகவும், மனைவியுடன் இணைந்து சமையல் எல்லாம் செய்து அசத்தியதாகவும் கூறியுள்ளார்.
மேலும் என்னுடைய இளைய மகன் பிரேம்ஜி அமரன் சிறு வயதாக இருக்கும் போது, நான் வளர்ந்ததும் சில்க் ஸ்மிதாவை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி அடம்பிடித்ததாகவும் கூறியுள்ளார் கங்கை அமரன்.