மது, மாதுன்னு எல்லா கெட்டபழக்கத்தால் வாழ்க்கையை இழந்த நடிகரால் அவதிப்பட்ட இயக்குனர்..
80களில் முன்னணி நடிகர் என்ற இடத்தினை பெற்று கொடிக்கட்டி பறந்தவர் தான் அந்த நடிகர். கருப்பான தோற்றமே அவரை பல இயக்குனர்கள் ஒதிக்கி வைக்க காரணமாக அமைந்தது. அப்படிப்பட்ட நடிகர் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன் திறமையால் முன்னேறி வந்தார்.
ஆனால் மது, பெண் சவகாசம் என பல கெட்டப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். இந்த பழக்கம் இல்லாமல் தன்னால் இருக்க முடியாதாம். அப்படி ஒரு படப்பிடிப்பின் போது திடீரென காணாமல் போயிருக்கிறார். கொடைக்கானலில் நடந்த அந்த ஷூட்டிங் பகுதியில் அங்குமிங்கும் இயக்குனர் தேடியிருக்கிறாராம்.
ஆனால் அந்த நடிகர் மும்பையில் இருப்பதாக தகவல் தெரிந்துள்ளது. ஏன் அங்கு சென்றார் என கேட்டால் நடிகருக்கு ஏற்ற வசதிகள் கிடைக்கவில்லை என்றும் அங்கு அவருக்கு தேவையான கெட்ட பழக்கங்கள் இல்லை என்று மும்பைக்கு சென்றிருக்கிறாராம்.
அப்படியொரு அடிமையாக இருந்திருக்கிறார் அந்த நடிகர். பின் ஒரு கட்டத்தில் மது, மாதுவால் வாழ்க்கையை இழந்து மரணமடைந்துவிட்டார். அவருக்கு பின் அவர் மகனும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது.