பொது இடத்துக்கு போய் மரண அடிவாங்கிய சினிமா நட்சத்திரங்கள்.. கமல் மகளுக்கு ஏற்பட்ட பரிதாபம்
சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலும் பொது இடங்களுக்கு செல்ல பாடிகார்ட் அல்லது பாக்ஸர்களை நியமித்து தான் போவார்கள். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் அப்படி இல்லாமல் ரசிகர்கள் கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிரச்சனையும் ஏற்பட்டிருக்கிறது. அப்படி நட்சத்திரங்கள் வெளியில் வந்து அடிவாங்கி பல்பு வாங்கியவர்களை பற்றி பார்க்கலாம்.
சம்யுக்தா ஹெக்டே
கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவியின் காதலியாக நடித்திருப்பார் நடிகை சம்யுக்தா ஹெக்டே. ஒருசில படங்களில் நடித்து வந்த சம்யுக்தா, பிரா லெகின் அணிந்து உடற்பயிற்சிக்கு தோழிகளுடன் பெங்களூர் பார்க்கிற்கு சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் உள்ளாடையுடன் வருவதை பார்த்த அங்கிருந்த ஒரு பெண், இப்படி வரலாமா என்று கேட்டிருக்கிறார். அப்படி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட அங்கிருந்தவர்கள் சம்யுக்தா மீது காட்டமாக நடந்து மூக்கில் ஒரு குத்துவிட்டிருக்கிறார்கள். பின் போலிசார் வந்து சரிசெய்து அனுப்பி வைத்துள்ளனர்.
சிவகார்த்திகேயன்
முன்னணி நடிகராக திகழ்ந்து சமீபத்தில் மாவீரன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சில ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமானநிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது கமல், ஹன்சிகாவும் அதே விமானத்தில் இருந்து வெளியில் வந்ததும், ரசிகர்கள் சிவகார்த்திகேயனை படாதபாடுபடுத்தி இருக்கிறார்கள். கராத்தே படத்தில் கமல்ஹாசனை கலாய்த்ததால், அதன் விளைவாக கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை அடித்தார்களாம்.
விஜய் சேதுபதி
சில ஆண்டுகளுக்கு முன் பெங்களூர் ஏர்ப்போட்டில் விஜய் சேதுபதி சென்றிருந்த போது ஒரு நபர் அவரின் உதவியாளரை காலால் எட்டி உதைத்திருக்கிறார். ஒரு அடி தள்ளி இருந்தால் விஜய் சேதுபதிக்கு தான் அந்த அடி விழுந்திருக்கும், அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
விஷால்
நடிகர் சங்க தலைவராகவும் நடிகராகவும் இருந்தபோது பலமுறை அடிவாங்கிய லிஸ்ட்டில் டாப்பில் இருப்பவர் நடிகர் விஷால். சரத்குமார், ராதாராவிக்கு எதிராகபேசியதாலும் தேர்தல் ரிசல்ட் சமயத்தில் விஷால் பலரால் அடிவாங்கியதாக அவரே கூறியிருந்தார்.
ஸ்ருதி ஹாசன்
கமல் ஹாசன் மகளாக டாப் இடத்தில் இருந்து வரும் நடிகை ஸ்ருதி ஹாசன் அம்மாவுடன் தங்கியிருந்தால். அப்போது ஒரு நபர் கதவை தட்டியதால் திறந்துள்ளார் ஸ்ருதி. அந்த நபர் ஸ்ருதி ஹாசன் கழுத்தை பிடித்து தரதரவென் இழுத்து வெளியே போட்டிருக்கிறாராம். ஆனால் அந்த நபர் யாரென்று ஸ்ருதிஹாசனுக்கு தெரியாதாம்.