சினிமாவுக்காக IT கம்பெனியை உதறிய நடிகர், நடிகைகள்!! யார் யார் தெரியுமா?
IT கம்பெனி
நடிகர், நடிகைகள் பலர் சினிமாவிற்கு வருவதற்கு முன் அவர்கள் படித்த படிப்பிற்கான வேலைகளை பார்த்து வந்தனர். அப்படி டாக்டர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு சினிமாவிற்கு வந்த நடிகைகள் தெரிந்த ஒன்றுதான். ஆனால் சினிமாவுக்கு வருவதற்கு முன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்த நடிகர்கள்? எந்த ஐடி கம்பெனி? என்ற விவரம் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக் அதிகழ்ந்து வரும் நடிகை கயாடு லோஹர், திரை பயணத்திற்கு முன் கான்சென்ட்ரிக்ஸ்(Concentrix) என்ற ஐடி நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். தெலுங்கு நடிகை அனன்யா நாகல்லா, இன்ஃபோசிஸ் என்ற ஐடி கம்பெனியில் பணியாற்றி பின் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

நடிகர் பசி ஜோசப் சினிமாவுக்கு முன் இன்ஃபோசிஸ் கம்பெனியில் வேலை பார்த்துள்ளார். நடிகர் டோவினா தாமஸ் காக்னிசண்ட் கம்பெனியில் வேலை பார்த்தவர்.

மலையாள நடிகர் நிவின் பாலி இன்ஃபோசிஸ் கம்பெனியில் பணியாற்றி பின் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க வருவதற்கு முன் ஆக்சென்ச்சர் என்ற ஐடி கம்பெனியில் பணியாற்றியுள்ளார்.
