6 படங்களில் ரூ. 4500 கோடி கலெக்ஷன்!! சம்பளத்தை 10ஆக உயர்த்திய பிரபல நடிகை...
தொட்டதெல்லாம் ஹிட் என்பதற்கு ஏற்ப ஒரு நடிகை நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்திருக்கிறது. அந்தவகையில் இளம் நடிகையாக நடித்த 6 படங்களில் ரூ. 4500 கோடிக்கும் மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸ் குயினாக திகழ்ந்து வருகிறார் அந்த நடிகை.
ராஷ்மிகா மந்தனா
அவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. என்னதான் கன்னட படத்தில் 2017ல் ராஷ்மிகா மந்தனா அறிமுகமாகினாலும், தற்போது இந்திய சினிமாவின் நேஷனல் கிரஷ் இடத்தினை பிடித்திருக்கிறார். தமிழில், சுல்தான், வாரிசு, குபேரா போன்ற படங்களில் நடித்து டாப் இடத்தினை பிடித்திருக்கிறார்.

அவர் நடித்த புஷ்பா படம் ரூ. 400 கோடி வசூலை ஈட்டியது. அடுத்து விஜய்யுடன் நடித்த வாரிசு படம் 300 கோடி ரூபாயும் அனிமல் படம் ரூ. 900 கோடி வசூலும் ஈட்டியது.
அதன்பின் வெளியான புஷ்பா 2 படம் ரூ.1900 கோடியை ஈட்டி மிரட்டியது. விக்கி கெளசலுடன் ந்டைத்த சாவா படம் வெளியாகி ரூ. 800 கோடியை வசூலித்தது. தனுஷின் குபேரா படம் ரூ. 140 கோடியையும் ஈட்டியது.
இதன்மூலம் 4 ஆண்டுகளில் முக்கியமான 6 படங்களில் நடித்து ரூ. 4500 கோடிக்கும் அதிகமான பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஈட்டிய நடிகை என்ற பெருமையை ராஷ்மிகா மந்தனா பெற்றுள்ளார். அவர் நடிப்பில் காக்டெயில், மைசா போன்ற படங்கள் வெளியாகவும் இருக்கிறது.
10 கோடி சம்பளம்
இந்நிலையில், ஒரு படத்திற்காக ரூ 5 கோடி சம்பளமாக வாங்கி வந்த ராஷ்மிகா மந்தனா, அப்படியே இரு மடங்காக உயர்த்தி ஒரு படத்திற்கு ரூ. 10 கோடி வரை சம்பளத்தை அதிகரித்திருக்கிறார். பெரிய பட்ஜெட் படங்கள் என்றாலே ரூ. 13 கோடி வரை சம்பளத்தை நிர்ணயித்துள்ளாராம்.
ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் நடிகை நயன் தாரா கிட்டத்தட்ட ரூ. 10 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில் ராஷ்மிகா மந்தனாவும் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நம்பர் 1 நடிகையாக மாறியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகா மந்தனாவிற்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.