26 வயதில் தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை நந்தினி!! காரணம் இதுதானாம்.
நடிகை நந்தினி
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கெளரி என்ற சீரியலில் நடித்து தமிழில் பிரபலமானவர் தான் நடிகை நந்தினி. ஜீவ ஹூவாகிடே, சங்கர்ஷா மதுமகளு, நீனாதே நா போன்ற கன்னட சீரியல்களில் நடித்த நந்தினி, கெளரி சீரியலில் லீட் ரோலில் நடித்து வந்தார். பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடரில், கனகா, துர்கா என்ற இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

தற்கொலை
பெங்களூரில் தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கிறார். நீண்ட நேரமாக அறையின் கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகமடைந்த விடுதியின் உதவியாளர் அறையின் கதவை திறந்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார்.
அதன்பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அறையை போலிசார் சோதனை செய்தபோது தற்கொலை செய்வதற்கு முன் நந்தினி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

கடிதம்
அதில் தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக பெற்றோர் தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதாகவும் பெற்றோரை பார்த்து, திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை என்று சொல்லமுடியவில்லை. இந்த விஷயத்தால் தான் மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று எழுதப்பட்டிருக்கிறது.
இந்த கடிதத்தை ஆதாரமாக வைத்து, கெங்கேரி காவல் நிலையத்தில், 2023ல் BNSS சட்டத்தின் பிரிவு 194 கீழ் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் நந்தினி டிசம்பர் 28 ஆம் தேதி இரவு 11.16 மணி முதல் டிசம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 12.30 மணிக்குள் உயிரிழந்திருக்கலாம், தற்கொலை செய்து கொண்ட தகவல் காவல் துறைக்கு காலை 9.15 மணிக்கு வந்ததை அடுத்து விடுதிக்கு சென்று உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கெங்கேரி காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.