குழந்தைப் பெற்றுக்கொள்ளாமல் மகளை தத்தெடுத்து வளர்க்கும் நடிகை அபிராமி!! புகைப்படங்கள்..
நடிகை அபிராமி
தென்னிந்திய நடிகையாக 90 காலக்கட்டத்தில் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை அபிராமி. 1995ல் வெளியான கதாபுருஷன் என்ற மலையாள படத்தில் குழந்தை நட்ச்த்திரமாக அறிமுகமாகி 1999ல் சுரேஷ்கோபி நடிப்பில் வெளியான பத்ரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை அபிராமி.
இப்படத்தினை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து பிரபலமானார். நடிகை கமல் ஹாசன் நடிப்பில் 2004ல் வெளியான விருமாண்டி படத்தில் நடித்து சினிமாவில் இருந்து விலகினார்.
ராகுல் என்பவரை 2009ல் திருமணம் செய்து வெளிநாட்டில் செட்டிலாகிய அபிராமி, மீண்டும் சினிமா பக்கம் திரும்பினார். சமீபத்தில் வெளியான தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்தார் அபிராமி.
பெண் குழந்தை
திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்ளாத அபிராமி, ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.


