நடிகையின் கையைப் பிடித்து சில்மிஷம் செய்த இளைஞர்கள்!! ஷூட்டிங்கில் பரபரப்பு..
நீமா ரே
சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இரவின் விழிகள் படத்தை மகேந்திரா பிலிம் பேக்டரி மகேந்திரன் தயாரித்து வருகிறார். மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க கதாநாயகியாக நீமா ரே நடித்து வருகிறார். இவர் கன்னடத்தில் வெளியான பிங்காரா என்ற படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கியுள்ளார்.
முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஆண்டி, சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சமூகவலைத்தளங்களை வைத்து சைக்கோ திரில்லர் படமாக உருவாகி வருகிறது.
சில்மிஷம் செய்த இளைஞர்கள்
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்திருந்த சில இளைஞர்கள் படப்பிடிப்பு தளத்தில் அத்துமீறி படத்தின் கதாநாயகி நீமா ரேவின் கைப்பிடித்து இழுத்து வம்பு செய்ய முற்பட்டுள்ளனர். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் அவர்களை பொறுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தும் எதுவும் செய்யமுடியவில்லை.
பின் படபிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒருசில விஜய் ரசிகர்கள் உதவியோடு படப்பிடிப்பிற்காக வைத்திருந்த சாட்டையை எடுத்து கழற்றிய பின் அந்த ரோமியோக்கள் ஆளைவிட்டால் போதும் என்று தலைத்தெறிக்க ஓடியுள்ளனர். இந்த சம்பவத்தால் நீமா ரே ரொம்பவும் பயந்துப்போனதாக கூறப்படுகிறது.
மேலும், அன்று இரவு வாடா கருப்பா என்ற ஆக்ரோஷமான பாடல் ஷூட்டிங் நடந்துள்ளது. பாடலை கேட்ட அப்பகுதியில் இருந்த பெண்கள் சிலருக்கு இயல்பாகவே சாமி வந்து ஆடத்தொடங்கியுள்ளனர்.
காலையில் நடந்த சம்பவத்தாலே அதிர்ந்து போன நாயகி நீமா ரே, இதை பார்த்தும் மேலும் மிரண்டு போயிருக்கிறார்ம். அவரை உடனே ஒரு வழியாக சமாதானப்படுத்தி மறுநாள் இயல்பு நிலைக்கு மாற்றிவிட்டனர்.