Dog Lover வீட்ல ரெண்டு எழவு விழணும்!! சாபம் விட்ட சீரியல் நடிகை ரிஹானா..
தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோட்டில் தெரு நாய்கள் அகற்றப்பட வேண்டும் - ஆதரிப்பவர்கள் மற்றும் அதை எதிர்ப்பவர்களை வைத்து விவாதம் நடந்தது.
இந்த விஷயத்திற்கு ஆதரவளித்தவர்களை பலரும் கண்டித்தும் கோபிநாத்தையும் பலரும் பாராட்டியும் வந்தனர். இதுகுறித்து பலர் தங்களின் கருத்துக்களை கூறி வந்த நிலையில் சீரியல் நடிகை ரிஹானா, நாய் காதலர்களை கடுமையாக விமர்சித்து சாபம் விட்டுள்ளார்.
Dog Lover
நாய்களுக்கு சப்போர்ட் செய்பவர்கள் வீட்டில் இருப்பவர்களின் வீட்டில் நாய் கடித்து சாகணும், அவங்க அம்மாவோ பாட்டியோ இறக்கணும். இரண்டு எழவாவது விழணும்.
காரியத்துக்கு போடும் சாப்பாட்டை எடுத்துட்டு அந்த நாய்க்கு போடணும் என்று மிகவும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். இதற்கு சிலர் ஆதரவாக பேசினாலும் ரிஹானா பேசியது தவறு என்று விமர்சித்தும் வருகிறார்கள்.
இதெல்லாம் நடந்ததுக்கு அப்புறமும் நான் dog lover தான் அப்படின்னு சொல்லட்டும் அப்புறம் நாம ஏத்துவோம். pic.twitter.com/ynNIdSjxwn
— 𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) September 7, 2025