நான் எப்படி நோ சொல்லுவேன்!! கமலுடன் இந்த வேலை செய்து வருகிறேன் பிரபல நடிகை அபிராமி..
மலையாள சினிமாவில் கதபுருஷன், பத்ரம், ஸ்ரதா உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்து கதாநாயகியாக நடித்து நடிகையாக பிரபலமானவர் நடிகை அபிராமி. தமிழில் வானவில், மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்லின், சமஸ்தானம் போன்ற படங்களில் நடித்து வந்த அபிராமி, கமல் ஹாசனின் விருமாண்டி படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
2004ல் வெளியான விருமாண்டி படத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி ராகுல் பாவணன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டிலாகினார்.
அதன்பின் 10 ஆண்டுகளுக்கு பின் சினிமாவில் ஆர்வம் காட்டிய அபிராமி, 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். குணச்சித்திர ரோலில் நடித்து வரும் அபிராமி தற்போது ஒரு கோடை Murder Mystery என்ற வெப் தொடரில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
அப்படத்தின் பிரஸ் மீட்டில், கமல் ஹாசனுடன் நான் பேசியிருக்கிறேன், அவர் படத்தில் விஸ்வரூபம், உத்தம வில்லன் படத்தில் டப்பிங் வேலையை செய்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை அபிராமி.
மேலும், கமல் ஹாசன் மீண்டும் விருமாண்டி 2 படத்தினை எடுத்தால் நடிப்பீர்களா என்ற கேள்வி கேட்கபட்டது. அதான், அன்னலட்சுமி செத்திவிட்டாலே எப்படி பண்ண முடியும் என்று சிரித்தபடி கூறினார். அதன்பின் கமல் சார் மறுபடியும் பண்றதா இருந்தால் என்னை கூப்பிடுறதா இருந்தா நான் ஏன் பண்ணாம இருக்க போறேன்.