சினிமாவுக்கு நோ, அப்பா போட்ட கண்டிஷன்.. அதிதி ஷங்கர் உடைத்த ரகசியம்
அதிதி ஷங்கர்
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி ஷங்கர், மருத்துவ படிப்பை முடித்த பின் சினிமாவில் நடிக்க வந்து விட்டார். நடிகர் கார்த்தியுடன் ஜோடியாக விருமன் படத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலே நல்ல வரவேற்பு பெற்று பிரபலமும் ஆனார். இதனால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெற்ற இவர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார்.
தற்போது, அர்ஜுன் தாஸ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். சமீபத்தில் அதிதி நடிப்பில் விஷ்ணு வர்தன் இயக்கத்தில் 'நேசிப்பாயா' படம் வெளியானது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது நடிகை அதிதி சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் தன் தந்தை ஷங்கர் விதித்த நிபந்தனைகள் குறித்து பகிர்ந்துள்ளார்.
உடைத்த ரகசியம்
அதில், " மருத்துவ படிப்பு முடிந்ததும் நடிக்க முயற்சிப்பேன் என்று அப்பாவிடம் முன்பே சொல்லியிருந்தேன். அப்போது அப்பா என்னிடம் ஒரு கண்டிஷன் போட்டார்.
அதாவது, நான் சினிமாவில் வெற்றி பெறவில்லை என்றால் மீண்டும் மருத்துவ துறைக்கு வந்து விட வேண்டும் என்று கூறினார். நான் சம்மதித்த பின் தான் அவர் என்னை சினிமாவில் நடிக்க அனுமதித்தார்" என்று கூறியுள்ளார்.