இது வெப் சீரிஸா, அந்த மாதிரி மூவியா? இயக்குனர் கொடுத்த ஆடையை பார்த்து திட்டிய நடிகை

web series actress
By Tony Nov 01, 2021 05:30 PM GMT
Report

தமிழ் சினிமா துறையில் வாய்ப்பு தேடி அலைபவர்கள் ஏராளம். அதிலும் குறிப்பாக ஹீரோயின் சான்ஸ் கேட்டு செல்லும் நடிகைகளை தவறாக பயன்படுத்திக்கொள்ளும் முறையும் சினிமா துறையில் இருக்கிறது என தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

அதே போல ஆடிஷன் நடத்துகிறேன் என்கிற பெயரில் சிலர் அதை விட மோசமாக நடந்துகொள்கிறார்க்கள் என பிரபல சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி கூறி இருக்கிறார். அடிக்ஷன் என சொல்லி வர வைத்த நான்கைந்து நாட்கள் நம்மை நடிக்க வைத்து அவர்கள் தொழில் கற்றுக்கொண்டிருப்பார்கள், மற்றவர்கள் இந்த அடிக்ஷன் என்னமோ ஐடி நிறுவன interview போல் பில்டப் கொடுப்பார்கள்.

மேலும் சில இயக்குனர்கள் விதவிதமாக நடித்து காட்ட சொல்லி கேட்பார்கள், அதிலும் கவர்ச்சி உடை அணிந்து நடித்து காட்டும்படி ஒரு சிலர் எல்லைமீறி செல்வார்கள். சரி கவர்ச்சியாக நடிக்கவும் ஒப்புக்கொண்டேன், அப்போது இயக்குனர் கொடுத்த உடை தான் அதிர்ச்சியாக இருந்தது. அதில் பின்னால் எல்லாமே தெரிந்தது. இது வெப் சீரிஸா இல்லை அந்த மாதிரி படமா என கேட்டு கோபத்துடன் அந்த இயக்குனரை திட்டி விட்டாராம் ராஜேஸ்வரி.