22 வயதில் காதல் தோல்வி.. காரணத்தை உடைத்த இறுகப்பற்று பட நடிகை சானியா
சானியா ஐயப்பன்
மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சானியா ஐயப்பன், ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் வெளியான குயின் திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன் பின்னர் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த "லூசிபர்" மற்றும் மம்மூட்டி நடிப்பில் வெளியான "தி பிரீஸ்ட்" போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதை தொடர்ந்து, சானியா ஐயப்பன், விக்ரம் நடிப்பில் வெளிவந்த இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
சமீபத்தில் மலையாளத்தில் பிரிதிவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியான என்புரான் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சானியா ஐயப்பன் நடித்துள்ளார்.
காரணம்
22 வயதே ஆகும் சானியா தன்னுடைய காதல் தோல்வி அடைந்ததாக முன்பு பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்தது. தற்போது இதன் காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
அதில், "நான் காதலித்த நபர் எப்போதும் என்னிடம் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா துறையில் இருக்க மாட்டார்கள் என்று அடிக்கடி கூறுவார். நமக்கு மிகவும் பிடித்தவர்கள் அவ்வாறு கூறும்போது மிகவும் கடினமாக இருக்கும் அதன் காரணமாக தான் நான் அவரிடம் இருந்து விலகினேன்" என்று தெரிவித்துள்ளார்.