பெரிய உதடு!! தனக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்த நடிகை பூமிகா
நடிகை பூமிகா
டெல்லியில் பிறந்த நடிகை பூமிகா சாவ்லா கடந்த 2000ம் ஆண்டு வெளியான ஒரு தெலுங்கு படம் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார்.
விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின் ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம், சூர்யாவுடன் சில்லுனு ஒரு காதல் என அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்தன.
தமிழ் மட்டுமில்லாது போஜ்புரி, பஞ்சாபி, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 24 வருடங்களாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ஜெயம் ரவி அக்காவாக பிரதர் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் சிறு வயதில் அவருக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
மோசமான சம்பவம்
அதில், "சிறு வயதில் என் உதடு பெரியதாக இருந்ததால் அதை வைத்து அனைவரும் என்னை கேலி, கிண்டல் செய்தார்கள். இதனால் மன வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அது தான் என்னுடைய அடையாளம்" என்று பெருமையாக கூறியிருக்கிறார்.